search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்திரைத்தாள் மோசடி வழக்கு"

    20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இருந்து காலம்சென்ற அப்துல் கரீம் தெல்கியை விடுதலை செய்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Telgi #Stamppaperscam
    மும்பை:

    நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூளையாக இருந்ததாக கடந்த 2001-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து, புனே நகரில் உள்ள எர்ரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு மாற்றப்பட்ட தெல்கி  11 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தார்.



    பரப்பன அக்ரஹார சிறையில் அப்துல் கரீம் தெல்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சிறையில் இருந்த அப்துல் கரீம் தெல்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் அங்கு சிகிச்சை பெற்றுவந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 26-10-2017 அன்று மரணம் அடைந்தார்.

    இவ்வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக தெல்கி சார்பில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தண்டிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  #Telgi #Stamppaperscam  
    ×